Tuesday, March 26, 2013

17 வயது சிறுவனின் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய யாகூ


YAHOO நிறுவனம் LONDONச் சேர்ந்த சும்லி என்ற 17 வயதேயான சிறுவனுடைய நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது. இந்த சிறுவன், சிறிய வடிவிலான திரையுடைய ஸ்மார்ட்போன்கள் வழியாக படிக்கவல்ல ஒரு மொபைல் அப்ளிகேஷனை வடிவமைக்கும் நிறுவனம் நடத்தியுள்ளான். இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும்பொழுது சிறுவனுக்கு வயது வெறும் 15 தானாம்! அதைத்தான் வாங்கியுள்ளது YAHOO!
சில மாதங்களுக்கு முன்னர் YAHOOன் CEOவாகப் பொறுப்பேற்ற மரிசா மேயரின் கட்டளைப்படியே இந்நிறுவனம் வாங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வளவு விலைகொடுத்து வாங்கப்பட்டது என்பதுபோன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் அந்நிறுவனத்தின் உரிமையாளரான சும்லி என்ற 17 வயது சிறுவனுக்கு லண்டன் YAHOO அலுவலகத்தில் பணிநியமனம் வழங்கியுள்ளது YAHOO.

No comments:

Post a Comment