Friday, March 22, 2013

கணனி விளையாட்டி​ற்கென அதிநவீன உபகரணங்கள் அறிமுகம்

கணனி உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான Logitech ஆனது கணனி விளையாட்டிற்கு பயன்படும் அதிநவீன கீபோர்ட் மற்றும் சுட்டி போன்ற உபகரங்களை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
Logitech G எனும் தொடர் நாமங்களோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ் உபகரணங்கள் கணனி விளையாட்டுகளை இலகுவாக கையாளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இவற்றின் பெறுமதியை நோக்கினால் G100s சுட்டியானது 39 டொலர்களாகவும், G400s சுட்டி 59 டொலர்களாகவும், G500s சுட்டி 69 டொலர்களாகவும், G700s சுட்டி 99 டொலர்களாகவும் காணப்படுகின்றன.
அதேபோல G510s கீபோர்ட் ஆனது 119 டொலர்களாகவும், G19s கீபோர்ட் 199 டொலர்களாகவும், 7.1 Surround Sound தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட G430 ஹெட்செட் 79 டொலர்களாகவும் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment