இணையத்தள சேவைக்கு அப்பால் இலத்திரனியல் சாதன உற்பத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள கூகுள் நிறுவனமானது அதன் புதிய வெளியீடான Nexus 10 டேப்லட்களை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. 2560 x 1600 Pixel Resolution கொண்ட திரையுடன் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த டேப்லட்கள் உலகின் முதலாவது அதிகூடிய Resolution உடன் கூடிய டேப்லட்கள் என்ற பெயரையும் தாங்கிவருகின்றன. மேலும் இவற்றில் 5 மெகாபிக்சல்கள் மற்றும் 1.9 பிக்சல்கள் உடைய இரு கமெராக்களும் காணப்படுவதுடன் 16GB, 32GB ஆகிய சேமிப்பு வசதிகளைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளிவரவுள்ளன. இவை தவிர இந்த டேப்லட்களில் இணைக்கப்பட்டுள்ள 9000 mAh மின்கலமானது தொடர்ச்சியாக 7 மணித்தியாலங்கள் வரை செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றன. |
Wednesday, March 20, 2013
Google அறிமுகப்படுத்தும் Nexus 10 டேப்லட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment