Monday, May 6, 2013

தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளை கணனியின் எந்த ஒரு மூலையிலும் பயன்படுத்த உதவும் Google இன் புதிய வசதி.


தமிழில் தட்டச்சு செய்ய
அப்படி இருந்தாலும் முழுமையாக இருப்பதில்லை சில இடங்களில் கட்டம் கட்டமாக தெளிவற்று இருக்கும்.
ஆனால் தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய மாற்றத்தால் இன்று தமிழ் இணையத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றதென்றால்  மறுப்பதற்கில்லை.
தமிழை தட்டச்சு செய்ய பலரும் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். என்றாலும் Google தரும் அருமையான சேவையினை அதிகமானோர் அறிந்ததில்லை.



காலத்துக்கு காலம் தனது புத்தம் புதிய சேவைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கும் Google, பயனர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது.

Google Input tools அமைப்புக்கள்
 
Google வழங்கும் Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.
உதாரணமாக Face book இல் Status Update இடுவதற்கு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு, தேடு இயந்திரங்களில் தகவல்களை பெற்றுக்கொள்வதட்கு, வலை தளங்களில் கருத்துக்களை இடுவதற்கு, நண்பர் உறவினர்களுக்கு தெளிவான E-mail ஒன்றினை அனுப்புவதற்கு, கோப்புக்க ஆவணங்களுக்கு பெயரிடுவதற்கு என அடுக்கிக்கொண்டே போகலாம். 
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் சென்று அங்கு வரிசை படுத்தப்பட்டிருக்கும் 22 மொழிகளில் உங்களுக்கு தேவையான மொழி(களை)யை தேர்ந்தெடுத்து  "I agree to the Google Terms of Service and Privacy Policy." என்பதில் ஒரு Tick Mark ஐ இட்ட பின் Download Button ஐ அழுத்தினால் ஒரு சில நிமிடங்களில் Google Input Tools உங்கள் கணனியில் நிறுவப்பட்டு விடும்.

Google Input Tools தரவிறக்க

பிறகென்ன Task Bar இன் வலது மூலையில் நீங்கள் தேர்ந்தடுத்த மொழிகள் இருக்கும் உங்களுக்கு தட்டச்சு செய்ய தேவைப்படும் மொழியை தெரிவு செய்து தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்.

தட்டச்சு இடைமுகம்

நீங்கள் தகவல் தொழில்நுட்பம் என தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமெனின் தமிழை தேர்ந்தெடுத்த பின் thagaval tholilnutpam என தமிங்கிலம் மொழியால் தட்டச்சு செய்தால் "தகவல் தொழில்நுட்பம்" என மாறிவிடும், மேலும் மொழித்தெரிவை மாற்ற Win Key + Space Bar ஐ பயன்படுத்தலாம். இது தவிர Task bar  இருக்கும் Google Input Tools ஐ சுட்ட வரும் Language Preference என்பதன் மூலம் எமக்கு தேவையான மொழியை Task bar க்கு கொண்டுவரவோ அல்லது Task bar இலிருந்து அகற்றி விடவோ முடியும்.

Google Input tools மொழி மாற்ற
தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும். 
 

Sunday, May 5, 2013

கணனியின் Desktop பகுதியை அழகானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திடும் XWidget


themes தரவிறக்கம் கணணியை மெருகூட்டும் XWidget

கணனியின் Desktop பகுதியை அழகானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திட XWidget உதவுகின்றது. இதனை தரவிரக்குவிதன் மூலம் இலகுவாக நிறுவிக்கொள்ள முடிவதுடன் எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ளதனால் அனைத்து தரப்பினராலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது.



இது பொதுவாக 14 பயனுள்ள widgets களைக் கொண்டுள்ளது. மேலும் தேவைப்ப்படும்விடத்து இதன் தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ள முடிவதுடன் தேவைக்கு ஏற்றாட் போல் உருவாக்கிக்கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இது வெறும் 7MB அளவினையே கொண்டுள்ளதுடன் கணனியின் வேகத்திற்கு பங்கம் விளைவிக்காமல் செயற்படுகின்றது.  Visual Widget Editor என்பதனை இது தன்னகத்தே கொண்டுள்ளது இதன் மூலம் எமது கற்பனைக்கு எட்டிய விதத்தில் Widget களினை உருவாக்கி பயன் பெறலாம்.


கீழுள்ள இணைப்பில் சென்று இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.

Requirements:

WindowsXP/Vista/
Windows7/Windows8





இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.


இணைய சேமிப்பகத்தின் பயனை இன்று பலரும் அறிந்து வைத்துள்ளனர் குறிப்பட்ட தளத்துக்கு எமது கோப்புக்கள் ஆவணங்களை தரவேற்றுவதன் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த இரு கணணியை பயன்படுத்தியும் எமது தரவுகளை பெற்றுக்கொள்ள முடிவதோடு இன்னும் பல வகையான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

ஆரம்பத்தில் இறுவட்டுக்கள், Flash Drive போன்ற சாதனங்களில் சேமிக்கப்பட்ட தரவுகள் இன்று இணையத்தில் சேமிக்கக்கூடிய சாத்தியப்பாடானது தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றமே என்றால் அது மிகையாகாது.
"அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்" என்ற பதிவின் மூலம் இதனை நன்கு விளங்கிக்கொள்ளலாம்.

அந்தவகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "Mega" இணைய சேமிப்பகம் உட்பட இன்னும் பல இணைய சேமிப்பகங்களை நாம் இங்கு அறிமுகம் செய்திருந்தோம். (Adrive.Norton Zone)


என்றாலும் நாம் இன்று அறிமுகப்படுத்தவிருப்பது "zoolz" எனப்படும் புத்தம்புதிய இணைய சேமிப்பகத்தை பற்றியே யாகும்.

  • இதன் மூலம் எவ்வித வேக வரையறையுமின்றி தரவுகளை தரவேற்றவும் தரவிறக்கவும் முடியும்.

  • நாம் தரவேற்றும் தரவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் Encrypts செய்து பாதுகாக்கின்றது.

  • Right-click menu ஊடாக தரவுகளை backup செய்யும் வசதிகளை தருகிறது.

  • Mobile Phone மூலமாக இயக்குவதற்கான Application ஐ தருகின்றது.

  • மேலும் பல சிறப்பம்சங்களுடன் ஆரம்பிக்க பட்டுள்ள இந்த சேவையானது, முதல் 1000000 கணக்குகளுக்கு 100 GB வரையான இலவச இட வசதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

என்றாலும் இங்கு US, Canada, UK, Australia, Germany, France, Switzerland, Austria, Denmark , Finland, Sweden, Belgium, Ireland, Luxembourg, Netherlands போன்ற நாடுகளிலுள்ள பயனாளர்களுக்கே கணக்குகளை துவங்க முடிகின்றது. என்றாலும் மிக விரைவில் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்படலாம். 

எமது மின்னஞ்சல் முகவரியை இந்த தளத்தில் பதிந்து வைப்பதன் மூலம் இந்த சேவை எமது நாட்டுக்கு இலவசமாக வழங்கப்படும் போது அதனை Notification ஆக பெற்றுக்கொள்ளலாம்.

இத தளத்துக்கு செல்ல கீழுள்ளஇணைப்பை சுட்டவும்.

உங்கள் கணனி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை கணக்குப் போட்டு காட்டும் இலவச மென்பொருள்.


கணணி பாதுகாப்பு உங்கள் கணனி எந்த அளவு பாதுகாப்பில் இருக்கின்றது?

சான் ஏற முழம் சருகும் என்பது போல வேகமாக முன்னேறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களை விட அந்நுட்பங்களை மிக மிக நுட்பமாக நோக்கி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் அளவும் வன்மை செயல்களின் பெருக்கமும் Jet வேகத்தையே தோற்கடித்துவிடும் போலுள்ளது. இதற்கேற்றாற்போல் அண்மையில் 250000 twitter கணக்குகள் திருடப்பட்டிருந்ததுடன் நேற்று (3/2/2013) எனது சகோதரரின் ebay, yahoo, gmailஆகிய மூன்று கணக்குகளும் ஒரே சந்தர்பத்தில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் எமது கணனியின் பாதுகாப்பை பேணுவது முக்கியத்துவம் பெறுகின்றது.


OPSWAT எனப்படும் மென்பொருள் எமது கணணி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை கணக்கு போட்டு காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் எமது கணனியின் பாதுகாப்பு தொடர்பில் பலவீனமாக இருக்கும் அம்சங்களை துல்லியமாக காட்டுவதுடன் அதற்கான தீர்வையும் தருகின்றது. இதனை கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். 


antivirus, antiphishing, backup, patch management, firewall, public file sharing, hard disk encryption மற்றும் மூன்றாம் நபர் மென்பொருள் தொடர்பில் சிறந்த முடிவுகளையும் தீர்வையும் தரும் இந்த மென்பொருளை அனைவராலும் இலகுவாக பயன்படுத்தி பயன்பெற முடியும்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.


Sources : topsoftdown

கணனியின் வேகத்தை பேணும் Synei System Utilities எனும் இலவச மென்பொருள்.


Synei System Utilities மென்பொருள்
புதியதொரு கணணியை அல்லது புதிதாக Windows நிறுவப்பட்ட ஒரு கணணியை பயன்படுத்துகையில் கண்ணிமைக்கும் நேரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாக இயங்குவது அனைவருக்கும் அனுபவத்தில் இருக்கலாம் என்றாலும் காலப்போக்கில் அதன் வேகத்தை நான் சொல்லி நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை.


என்றாலும் நீங்கள் கணணியை முறையாக பராமரிப்பதன் மூலம் ஆரம்பத்தில் இருந்த அதே வேகத்தில் நீண்ட காலம் பயன்படுத்தலாம். இதற்காக உதவுகின்றது "Synei System Utilities" எனும் மென்பொருள்.

இதெற்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் சிறந்த தனித்துவமான மென்பொருட்களை அறிமுகப்படுத்துவதில் +தகவல் தொழிநுட்பம் கண்ணும் கருத்துமாய் இருக்கும்.

அந்தவகையில் Synei System Utilities எனும் மென்பொருளானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மென்பொருள் என்பதுடன் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது. மேலும் இதனை கணனியில் நிறுவவேண்டிய அவசியமில்லை Double Click செய்வதன் மூலம் நேரடியாக பயன்படுத்தலாம் (Portable Application). 

கணனியில் இருக்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணனியின் வேகத்தை அதிகரிப்பதுடன் விண்டோஸ் இல் இருக்கும் குறைபாடுகளை நீக்கி கணனிக்கு பாதுகாப்பளிக்கின்றது. 
மேலும் இணையம், இணைய உலாவி, கணினி விளையாட்டுக்கள், போன்ற வற்றினை எவ்வித தங்கு தடையுமின்றி வினைத்திறனாக பயன்படுத்த உதவுவதுடன் மடிக்கணணி எனின் அதன் சக்தியை சேமிக்க வசதிகளையும் கொண்டுள்ளது.

இது தவிர கணணியை தானாக Shutdown செய்வதற்கான வசதியுடன் இன்னும் பல அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இலவசமான மென்பொருளை தரவிறக்ககீழுள்ள இணைப்பில் செல்லவும்.


  • இதனை Windows XP உட்பட Windows 8 வரை எந்த ஒரு Windows கணணியிலும் பயன்படுத்த முடியும்.
  • இதனை பயன்படுத்த .NET Framework 3.5

குறிப்பு : பெரும்பாலான மென்பொருள்கள் இயங்குவதற்கு Microsoft இன் .NET Framework தேவைப்படும் இது உங்கள் இயங்கு தளத்தில் நிறுவப்பட்டு இல்லையெனின் இதனை கீழுள்ள சுட்டி மூலம் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.

Download .NET Framework For windows

வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர்

வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாக சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில்
கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக “Blue background, white text.” என்று இருக்கும் . அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.


டெக்ஸ்ட் வரிகளில் எண்களைச் சேர்க்க: டாகுமெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட வரி ஒன்றில் உள்ள சொல்லைக் குறிப்பிட பாரா 1ல் 24 ஆவது வரியில் நான்காவது வார்த்தை என்றெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு வரிக்கும் ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டால் அந்த எண்ணைக் குறித்து எளிதாகச் சொல்லிவிடலாம் அல்லவா? சரி எப்படி டெக்ஸ்ட்டில் எண்களை அமைப் பது? ஆவணத்தைத் தயாரிக்கும் போதே எண்களை வரிக்கு முன் அமைக்க முடியாது. ஒவ்வொரு வரிக்கு முன் எண்ணை அமைத் தால் ஏதாவது சொல்லை திருத்துகையில் எண் முன் பின்னே செல்ல வாய்ப்பு ஏற்படலாம். இதற்குப் பதிலாக வேர்ட் தொகுப்பில் தானாக வரிகளில் எண்களை அமைக்கவும் தேவையற்ற இடங்களில் நீக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எண்களை அமைக்க கீழ்க்கண்ட வாறு செயல்படவும்.முதலில் பைல் (File) மெனுவினைக் கிளிக் செய்திடுங்கள். பின் அதிலிருந்து பேஜ் செட் அப் (“Page Setup”) தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் லே அவுட் (“Layout”) என்னும் டேபைக் கிளிக் செய்திடவும். பின் ““Line numbers” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் தந்துள்ள விருப்பங்களில் (restart numbering after each page, start at a particular number, etc.) உங்கள் திட்டத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டயலாக் பாக்ஸை மூடவும்.
வரிகளில் எண்கள் இருக்கும். ஆனால் நீங்கள் ஆவணத்தை எடிட் செய்கையில் சாதாரணமாக இந்த எண்கள் தெரியாது. ஆனால் அவை அங்குதான் இருக்கின்றன. எண்களைப் பார்க்க வேண்டுமென்றால் பிரிவியூ வைக்காணவும். எடிட்டிங் போது எண்களைப் பார்க்க வேண்டும் என்றால் வியூ (“View”) மெனுவினைக் கிளிக் செய்து பேஜ் லேஅவுட் (“Page Layout”) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வரிகளில் எண்களையும் காணலாம். ஆவணத்தையும் எடிட் செய்திடலாம்.சரி இந்த எண்களை நீக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக நீங்கள் சில பாராக்களில் மட்டும் எண்கள் இருப்பதனை விரும்ப மாட்டீர்கள். அவற்றை நீக்க என்ன செய்திட வேண்டும்? எண்களை நீக்க வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின் டெக்ஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் பாராகிராப் ( “Paragraph”) என்பதனைத் தேர்ந்து எடுக்கவும். வரும் பல டேப்கள் உள்ள டயலாக் பாக்ஸில் “Line and Page Breaks” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். அதில் “Suppress Line Numbers” என்ற கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்க வேண்டும். அதன்பின் ஓகே கிளிக் செய்திடவும்.

றேடியோ அலைகளை உள்வாங்கக்கூடிய 3D காதினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் விடயமாக முப்பரிமாண (3D) பிரிண்டிங் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.
இதனைப் பயன்படுத்தி அமெரிக்காவின் Princeton பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் றேடியோ அலைகளை துல்லியமாக உள்வாங்கக்கூடிய முப்பரிமாணக் காதினை உருவாக்கி சாதித்துள்னர்.
இதற்கென விசேட இழையம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் உணரி (Antenna) ஒன்றினையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் கேட்டல் குறைபாடுகளை இலகுவாக நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.