Thursday, May 2, 2013

அறிமுகமாகின்றது 7 அங்குல ஸ்மார்ட் கைப்பேசி


கைப்பேசி உலகில் முதன் முறையாக 7 அங்குல அளவுடைய H7000 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கைப்பேசியானது இரட்டை சிம் வசதியை கொண்டதுடன் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
இதன் திரையானது 1280 x 800 Pixel Resolution உயதாக அமைந்துள்ளது.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 0.3 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் இக்கைப்பேசியானது 1.2 GHz வேகத்தில் செயலாற்றவல்ல MTK8377 ARM Cortex-A9 Dual-Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 512MB RAM போன்றவை உட்பட 4GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டதாக காணப்படுகின்றது.
இச்சேமிப்பு நினைவகத்தினை microSD கார்ட்களின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கும் வசதியும் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவற்றின் விலையானது 190 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment