Sunday, May 5, 2013

Google Classலிருந்து Youtube தளத்திற்கு Video களை பதிவேற்ற உதவும் Softwate

பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தின் அரிய படைப்பான கூகுள் கிளாஸ் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்களை நேரடியாகவே யூ டியூப் தளத்தில் பதிவேற்றுவதற்கு Fullscreen BEAM எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோக்களை தனிப்பட்ட பாவனைக்காவோ அல்லது பொதுப் பயனர்களின் பாவனைக்காகவோ விட முடியும்.

கூகுள் கிளாஸிலிருந்து யூ டியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதற்கு முதலில் Fullscreen BEAM அப்பிளிக்கேஷனில் பதிவு (Register) செய்ய வேண்டும். அதன் பின்னர் கூகுள் கிளாஸின் உதவியுடன் வீடியோக் காட்சி ஒன்றினை பதிவு செய்து Fullscreen BEAM அப்பிளிக்கேஷனுடன் பகிர வேண்டும்.
இவ் அப்பிளிக்கேஷன் மூலம் யூ டியூப் தளத்தில் வீடியோக்களை பகிரும் அதே வேளையில் டுவிட்டர் தளத்தில் அவ்வீடியோவை டுவீட் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment