Sunday, May 5, 2013

ஈக்களைப் போன்ற மிகச் சிறிய பறக்கும் Robot கண்டுபிடிப்பு..!


உலகின் மிகச் சிறிய பறக்கும் ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிறிய ரக பறக்கும் ரோபோக்கள் காபன் பைபரினால் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு ரோபோவின் எடை ஒரு கிராம் எனவும் இறக்கைகள் இலத்திரனியல் சக்திகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

மனிதர்கள் பிரவேசிக்க முடியாத இடங்களில் இந்த சிறிய ரக ரோபோக்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவி புரியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த ரோபோக்களின் இறக்கைகள் செக்கனுக்கு 120 தடவைகள் அசையக் கூடியன
அமெரிக்காவின் ஹாவார்ட்  பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment