Monday, May 6, 2013

தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளை கணனியின் எந்த ஒரு மூலையிலும் பயன்படுத்த உதவும் Google இன் புதிய வசதி.


தமிழில் தட்டச்சு செய்ய
அப்படி இருந்தாலும் முழுமையாக இருப்பதில்லை சில இடங்களில் கட்டம் கட்டமாக தெளிவற்று இருக்கும்.
ஆனால் தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய மாற்றத்தால் இன்று தமிழ் இணையத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றதென்றால்  மறுப்பதற்கில்லை.
தமிழை தட்டச்சு செய்ய பலரும் பல வழிகளை பயன்படுத்துகின்றனர். என்றாலும் Google தரும் அருமையான சேவையினை அதிகமானோர் அறிந்ததில்லை.



காலத்துக்கு காலம் தனது புத்தம் புதிய சேவைகளை உலகுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கும் Google, பயனர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது.

Google Input tools அமைப்புக்கள்
 
Google வழங்கும் Google Input Tools மூலம் கணனியின் எந்த ஒரு இடத்திலும் தமிழ், சிங்களம் உட்பட 22 மொழிகளில் எவ்வித சிரமமுமின்றி தட்டச்சு செய்ய முடியும்.
உதாரணமாக Face book இல் Status Update இடுவதற்கு, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு, தேடு இயந்திரங்களில் தகவல்களை பெற்றுக்கொள்வதட்கு, வலை தளங்களில் கருத்துக்களை இடுவதற்கு, நண்பர் உறவினர்களுக்கு தெளிவான E-mail ஒன்றினை அனுப்புவதற்கு, கோப்புக்க ஆவணங்களுக்கு பெயரிடுவதற்கு என அடுக்கிக்கொண்டே போகலாம். 
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பு மூலம் சென்று அங்கு வரிசை படுத்தப்பட்டிருக்கும் 22 மொழிகளில் உங்களுக்கு தேவையான மொழி(களை)யை தேர்ந்தெடுத்து  "I agree to the Google Terms of Service and Privacy Policy." என்பதில் ஒரு Tick Mark ஐ இட்ட பின் Download Button ஐ அழுத்தினால் ஒரு சில நிமிடங்களில் Google Input Tools உங்கள் கணனியில் நிறுவப்பட்டு விடும்.

Google Input Tools தரவிறக்க

பிறகென்ன Task Bar இன் வலது மூலையில் நீங்கள் தேர்ந்தடுத்த மொழிகள் இருக்கும் உங்களுக்கு தட்டச்சு செய்ய தேவைப்படும் மொழியை தெரிவு செய்து தட்டச்சு செய்ய ஆரம்பியுங்கள்.

தட்டச்சு இடைமுகம்

நீங்கள் தகவல் தொழில்நுட்பம் என தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமெனின் தமிழை தேர்ந்தெடுத்த பின் thagaval tholilnutpam என தமிங்கிலம் மொழியால் தட்டச்சு செய்தால் "தகவல் தொழில்நுட்பம்" என மாறிவிடும், மேலும் மொழித்தெரிவை மாற்ற Win Key + Space Bar ஐ பயன்படுத்தலாம். இது தவிர Task bar  இருக்கும் Google Input Tools ஐ சுட்ட வரும் Language Preference என்பதன் மூலம் எமக்கு தேவையான மொழியை Task bar க்கு கொண்டுவரவோ அல்லது Task bar இலிருந்து அகற்றி விடவோ முடியும்.

Google Input tools மொழி மாற்ற
தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும். 
 

Sunday, May 5, 2013

கணனியின் Desktop பகுதியை அழகானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திடும் XWidget


themes தரவிறக்கம் கணணியை மெருகூட்டும் XWidget

கணனியின் Desktop பகுதியை அழகானதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திட XWidget உதவுகின்றது. இதனை தரவிரக்குவிதன் மூலம் இலகுவாக நிறுவிக்கொள்ள முடிவதுடன் எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ளதனால் அனைத்து தரப்பினராலும் இலகுவாக பயன்படுத்த முடிகிறது.



இது பொதுவாக 14 பயனுள்ள widgets களைக் கொண்டுள்ளது. மேலும் தேவைப்ப்படும்விடத்து இதன் தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ள முடிவதுடன் தேவைக்கு ஏற்றாட் போல் உருவாக்கிக்கொள்ளும் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது.

இது வெறும் 7MB அளவினையே கொண்டுள்ளதுடன் கணனியின் வேகத்திற்கு பங்கம் விளைவிக்காமல் செயற்படுகின்றது.  Visual Widget Editor என்பதனை இது தன்னகத்தே கொண்டுள்ளது இதன் மூலம் எமது கற்பனைக்கு எட்டிய விதத்தில் Widget களினை உருவாக்கி பயன் பெறலாம்.


கீழுள்ள இணைப்பில் சென்று இதனை தரவிறக்கிக்கொள்ளலாம்.

Requirements:

WindowsXP/Vista/
Windows7/Windows8





இலவசமாக 100 GB இணைய சேமிப்பக வசதியை வழங்கும் புதிய சேவை.


இணைய சேமிப்பகத்தின் பயனை இன்று பலரும் அறிந்து வைத்துள்ளனர் குறிப்பட்ட தளத்துக்கு எமது கோப்புக்கள் ஆவணங்களை தரவேற்றுவதன் மூலம் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த இரு கணணியை பயன்படுத்தியும் எமது தரவுகளை பெற்றுக்கொள்ள முடிவதோடு இன்னும் பல வகையான அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடிகின்றது.

ஆரம்பத்தில் இறுவட்டுக்கள், Flash Drive போன்ற சாதனங்களில் சேமிக்கப்பட்ட தரவுகள் இன்று இணையத்தில் சேமிக்கக்கூடிய சாத்தியப்பாடானது தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றமே என்றால் அது மிகையாகாது.
"அன்று தொடக்கம் இன்று வரை கணணி சேமிப்பகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்" என்ற பதிவின் மூலம் இதனை நன்கு விளங்கிக்கொள்ளலாம்.

அந்தவகையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "Mega" இணைய சேமிப்பகம் உட்பட இன்னும் பல இணைய சேமிப்பகங்களை நாம் இங்கு அறிமுகம் செய்திருந்தோம். (Adrive.Norton Zone)


என்றாலும் நாம் இன்று அறிமுகப்படுத்தவிருப்பது "zoolz" எனப்படும் புத்தம்புதிய இணைய சேமிப்பகத்தை பற்றியே யாகும்.

  • இதன் மூலம் எவ்வித வேக வரையறையுமின்றி தரவுகளை தரவேற்றவும் தரவிறக்கவும் முடியும்.

  • நாம் தரவேற்றும் தரவுகளை மிகவும் பாதுகாப்பான முறையில் Encrypts செய்து பாதுகாக்கின்றது.

  • Right-click menu ஊடாக தரவுகளை backup செய்யும் வசதிகளை தருகிறது.

  • Mobile Phone மூலமாக இயக்குவதற்கான Application ஐ தருகின்றது.

  • மேலும் பல சிறப்பம்சங்களுடன் ஆரம்பிக்க பட்டுள்ள இந்த சேவையானது, முதல் 1000000 கணக்குகளுக்கு 100 GB வரையான இலவச இட வசதி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

என்றாலும் இங்கு US, Canada, UK, Australia, Germany, France, Switzerland, Austria, Denmark , Finland, Sweden, Belgium, Ireland, Luxembourg, Netherlands போன்ற நாடுகளிலுள்ள பயனாளர்களுக்கே கணக்குகளை துவங்க முடிகின்றது. என்றாலும் மிக விரைவில் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்படலாம். 

எமது மின்னஞ்சல் முகவரியை இந்த தளத்தில் பதிந்து வைப்பதன் மூலம் இந்த சேவை எமது நாட்டுக்கு இலவசமாக வழங்கப்படும் போது அதனை Notification ஆக பெற்றுக்கொள்ளலாம்.

இத தளத்துக்கு செல்ல கீழுள்ளஇணைப்பை சுட்டவும்.

உங்கள் கணனி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை கணக்குப் போட்டு காட்டும் இலவச மென்பொருள்.


கணணி பாதுகாப்பு உங்கள் கணனி எந்த அளவு பாதுகாப்பில் இருக்கின்றது?

சான் ஏற முழம் சருகும் என்பது போல வேகமாக முன்னேறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களை விட அந்நுட்பங்களை மிக மிக நுட்பமாக நோக்கி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் அளவும் வன்மை செயல்களின் பெருக்கமும் Jet வேகத்தையே தோற்கடித்துவிடும் போலுள்ளது. இதற்கேற்றாற்போல் அண்மையில் 250000 twitter கணக்குகள் திருடப்பட்டிருந்ததுடன் நேற்று (3/2/2013) எனது சகோதரரின் ebay, yahoo, gmailஆகிய மூன்று கணக்குகளும் ஒரே சந்தர்பத்தில் திருடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் எமது கணனியின் பாதுகாப்பை பேணுவது முக்கியத்துவம் பெறுகின்றது.


OPSWAT எனப்படும் மென்பொருள் எமது கணணி எந்த அளவு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை கணக்கு போட்டு காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் எமது கணனியின் பாதுகாப்பு தொடர்பில் பலவீனமாக இருக்கும் அம்சங்களை துல்லியமாக காட்டுவதுடன் அதற்கான தீர்வையும் தருகின்றது. இதனை கணனியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் இதனை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். 


antivirus, antiphishing, backup, patch management, firewall, public file sharing, hard disk encryption மற்றும் மூன்றாம் நபர் மென்பொருள் தொடர்பில் சிறந்த முடிவுகளையும் தீர்வையும் தரும் இந்த மென்பொருளை அனைவராலும் இலகுவாக பயன்படுத்தி பயன்பெற முடியும்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லவும்.


Sources : topsoftdown

கணனியின் வேகத்தை பேணும் Synei System Utilities எனும் இலவச மென்பொருள்.


Synei System Utilities மென்பொருள்
புதியதொரு கணணியை அல்லது புதிதாக Windows நிறுவப்பட்ட ஒரு கணணியை பயன்படுத்துகையில் கண்ணிமைக்கும் நேரத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் வேகமாக இயங்குவது அனைவருக்கும் அனுபவத்தில் இருக்கலாம் என்றாலும் காலப்போக்கில் அதன் வேகத்தை நான் சொல்லி நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியதில்லை.


என்றாலும் நீங்கள் கணணியை முறையாக பராமரிப்பதன் மூலம் ஆரம்பத்தில் இருந்த அதே வேகத்தில் நீண்ட காலம் பயன்படுத்தலாம். இதற்காக உதவுகின்றது "Synei System Utilities" எனும் மென்பொருள்.

இதெற்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் சிறந்த தனித்துவமான மென்பொருட்களை அறிமுகப்படுத்துவதில் +தகவல் தொழிநுட்பம் கண்ணும் கருத்துமாய் இருக்கும்.

அந்தவகையில் Synei System Utilities எனும் மென்பொருளானது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மென்பொருள் என்பதுடன் எளிமையான இடைமுகத்தை கொண்டுள்ளது. மேலும் இதனை கணனியில் நிறுவவேண்டிய அவசியமில்லை Double Click செய்வதன் மூலம் நேரடியாக பயன்படுத்தலாம் (Portable Application). 

கணனியில் இருக்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்கி கணனியின் வேகத்தை அதிகரிப்பதுடன் விண்டோஸ் இல் இருக்கும் குறைபாடுகளை நீக்கி கணனிக்கு பாதுகாப்பளிக்கின்றது. 
மேலும் இணையம், இணைய உலாவி, கணினி விளையாட்டுக்கள், போன்ற வற்றினை எவ்வித தங்கு தடையுமின்றி வினைத்திறனாக பயன்படுத்த உதவுவதுடன் மடிக்கணணி எனின் அதன் சக்தியை சேமிக்க வசதிகளையும் கொண்டுள்ளது.

இது தவிர கணணியை தானாக Shutdown செய்வதற்கான வசதியுடன் இன்னும் பல அம்சங்களைக் கொண்டுள்ள இந்த இலவசமான மென்பொருளை தரவிறக்ககீழுள்ள இணைப்பில் செல்லவும்.


  • இதனை Windows XP உட்பட Windows 8 வரை எந்த ஒரு Windows கணணியிலும் பயன்படுத்த முடியும்.
  • இதனை பயன்படுத்த .NET Framework 3.5

குறிப்பு : பெரும்பாலான மென்பொருள்கள் இயங்குவதற்கு Microsoft இன் .NET Framework தேவைப்படும் இது உங்கள் இயங்கு தளத்தில் நிறுவப்பட்டு இல்லையெனின் இதனை கீழுள்ள சுட்டி மூலம் தரவிறக்கி நிறுவிக்கொள்ளவும்.

Download .NET Framework For windows

வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர்

வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாக சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Tools என்பதில்
கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக “Blue background, white text.” என்று இருக்கும் . அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.


டெக்ஸ்ட் வரிகளில் எண்களைச் சேர்க்க: டாகுமெண்ட் ஒன்றில் குறிப்பிட்ட வரி ஒன்றில் உள்ள சொல்லைக் குறிப்பிட பாரா 1ல் 24 ஆவது வரியில் நான்காவது வார்த்தை என்றெல்லாம் சொல்ல வேண்டியதிருக்கும். இதற்குப் பதிலாக ஒவ்வொரு வரிக்கும் ஒரு எண்ணைக் கொடுத்துவிட்டால் அந்த எண்ணைக் குறித்து எளிதாகச் சொல்லிவிடலாம் அல்லவா? சரி எப்படி டெக்ஸ்ட்டில் எண்களை அமைப் பது? ஆவணத்தைத் தயாரிக்கும் போதே எண்களை வரிக்கு முன் அமைக்க முடியாது. ஒவ்வொரு வரிக்கு முன் எண்ணை அமைத் தால் ஏதாவது சொல்லை திருத்துகையில் எண் முன் பின்னே செல்ல வாய்ப்பு ஏற்படலாம். இதற்குப் பதிலாக வேர்ட் தொகுப்பில் தானாக வரிகளில் எண்களை அமைக்கவும் தேவையற்ற இடங்களில் நீக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எண்களை அமைக்க கீழ்க்கண்ட வாறு செயல்படவும்.முதலில் பைல் (File) மெனுவினைக் கிளிக் செய்திடுங்கள். பின் அதிலிருந்து பேஜ் செட் அப் (“Page Setup”) தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் லே அவுட் (“Layout”) என்னும் டேபைக் கிளிக் செய்திடவும். பின் ““Line numbers” என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் தந்துள்ள விருப்பங்களில் (restart numbering after each page, start at a particular number, etc.) உங்கள் திட்டத்திற்கேற்ற வகையில் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் டயலாக் பாக்ஸை மூடவும்.
வரிகளில் எண்கள் இருக்கும். ஆனால் நீங்கள் ஆவணத்தை எடிட் செய்கையில் சாதாரணமாக இந்த எண்கள் தெரியாது. ஆனால் அவை அங்குதான் இருக்கின்றன. எண்களைப் பார்க்க வேண்டுமென்றால் பிரிவியூ வைக்காணவும். எடிட்டிங் போது எண்களைப் பார்க்க வேண்டும் என்றால் வியூ (“View”) மெனுவினைக் கிளிக் செய்து பேஜ் லேஅவுட் (“Page Layout”) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வரிகளில் எண்களையும் காணலாம். ஆவணத்தையும் எடிட் செய்திடலாம்.சரி இந்த எண்களை நீக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக நீங்கள் சில பாராக்களில் மட்டும் எண்கள் இருப்பதனை விரும்ப மாட்டீர்கள். அவற்றை நீக்க என்ன செய்திட வேண்டும்? எண்களை நீக்க வேண்டிய டெக்ஸ்ட்டை முதலில் தேர்ந்தெடுக்கவும். பின் டெக்ஸ்ட்டில் ரைட் கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் பாராகிராப் ( “Paragraph”) என்பதனைத் தேர்ந்து எடுக்கவும். வரும் பல டேப்கள் உள்ள டயலாக் பாக்ஸில் “Line and Page Breaks” என்ற டேபைத் தேர்ந்தெடுக்கவும். அதில் “Suppress Line Numbers” என்ற கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தை நீக்க வேண்டும். அதன்பின் ஓகே கிளிக் செய்திடவும்.

றேடியோ அலைகளை உள்வாங்கக்கூடிய 3D காதினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை


தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் விடயமாக முப்பரிமாண (3D) பிரிண்டிங் தொழில்நுட்பம் காணப்படுகின்றது.
இதனைப் பயன்படுத்தி அமெரிக்காவின் Princeton பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் றேடியோ அலைகளை துல்லியமாக உள்வாங்கக்கூடிய முப்பரிமாணக் காதினை உருவாக்கி சாதித்துள்னர்.
இதற்கென விசேட இழையம் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் உணரி (Antenna) ஒன்றினையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்காலத்தில் கேட்டல் குறைபாடுகளை இலகுவாக நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருந்தும்போதே நீரை வடிகட்டும் கருவி அறிமுகம்

உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானதாக காணப்படும் நீரில் உள்ள மாசுக்களால் பல்வேறு நோய்கள் உண்டாகும் அபாயங்கள் அதிகம் உள்ளன. 

இதற்காக நீரை வடிகட்டி அருந்தும் பழக்கம் தற்கால மக்களிடையே விரைவாகப் பரவி வருவதுடன் இதற்கென பல்வேறு கருவிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக NDūR Survival Straw எனும் நவீன கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இக்கருவியானது ஏனைய வடிகட்டும் கருவிகளைப் போன்று அல்லாமல் நீரை அருந்தும் வேளையில் உடனுக்குடன் வடிகட்டி தூய நீரை வழங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கருவியானது 99.9999 வீதம் நோய் விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்தான பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தருவதுடன் இதன் விலையானது 30 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.

ஈக்களைப் போன்ற மிகச் சிறிய பறக்கும் Robot கண்டுபிடிப்பு..!


உலகின் மிகச் சிறிய பறக்கும் ரோபோக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சிறிய ரக பறக்கும் ரோபோக்கள் காபன் பைபரினால் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு ரோபோவின் எடை ஒரு கிராம் எனவும் இறக்கைகள் இலத்திரனியல் சக்திகளைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன.

மனிதர்கள் பிரவேசிக்க முடியாத இடங்களில் இந்த சிறிய ரக ரோபோக்கள் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவி புரியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த ரோபோக்களின் இறக்கைகள் செக்கனுக்கு 120 தடவைகள் அசையக் கூடியன
அமெரிக்காவின் ஹாவார்ட்  பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.

BlackBerry R10 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்


முதற்தர கைப்பேசி வகைகளுள் ஒன்றாகக் கருதப்படும் BlackBerry கைப்பேசிகளின் புதிய அறிமுகமாக தற்போது QWERTY கீபோர்ட்டினைக் கொண்ட BlackBerry R10 எனும் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகின்றது.
3.1 அங்குல அளவு மற்றும் 720x720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது BlackBerry 10.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது
.
மேலும் பிரதான நினைவகமாக 2GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு ஆகியவற்றினையும், 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இக்கைப்பேசியின் விலையானது 300 - 400 டொலர்கள் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 மில்லியன் கணக்குகளை எட்டியது Outlook.com

சில காலங்களுக்கு முன்னர் பிரபல மின்னஞசல் சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்த Hotmail சேவைக்கு பதிலாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் Outlook.com சேவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
இப்புதிய தளத்தின் மூலம் தற்போது மின்னஞ்சல் சேவையைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 400 மில்லியனை எட்டிவிட்டதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை Hotmail கணக்குகளை வைத்திருக்கும் பயனர்கள் தற்போதும் அவற்றினை
பயன்படுத்துவதாகவும், இவற்றினை Outlook.com ஊடாக பயன்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

பிரம்மிப்பூட்டும் Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு


                                                                                                                                   புகைப்படங்களைக் கொண்டு Slideshow மூவிகளை உருவாக்குவதற்கு பல வகையான மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் Slideshow Movie Creator எனும் மென்பொருளானது ஏனைய மென்பொருட்களை விட முதன்மையாக விளங்குகின்றது.
இதற்கு காரணமாக இலகுவாகவும், விரைவாகவும் Slideshow மூவிகளை உருவாக்கக்கூடியதாக இருப்பதுடன் இருபரிமாணம் மற்றும் முப்பரிமாணங்களைக் கொண்ட Transition எபெக்ட்களை கொண்டிருத்தலும் ஆகும்.
இவை தவிர குறித்த Slideshow மூவிகளை AVI, MPEG, WMV, DivX, MP4, H.264/AVC, AVCHD, MKV, RM, MOV, XviD மற்றும் 3GP போன்ற கோப்புக்களாக மாற்றியமைக்கும் வசதியும் இம்மென்பொருளில் காணப்படுகின்றது.

மேலும் இலகுவான பயனர் இடைமுகத்தினைக் கொண்ட இம்மென்பொருளின் உதவியுடன் Slideshow மூவிகளுக்கு பின்னணி இசைகளையும் அமைத்துக்கொள்ள முடியும்.

Google Classலிருந்து Youtube தளத்திற்கு Video களை பதிவேற்ற உதவும் Softwate

பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனத்தின் அரிய படைப்பான கூகுள் கிளாஸ் மூலம் பதிவு செய்யப்படும் வீடியோக்களை நேரடியாகவே யூ டியூப் தளத்தில் பதிவேற்றுவதற்கு Fullscreen BEAM எனும் புதிய அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு பதிவேற்றப்படும் வீடியோக்களை தனிப்பட்ட பாவனைக்காவோ அல்லது பொதுப் பயனர்களின் பாவனைக்காகவோ விட முடியும்.

கூகுள் கிளாஸிலிருந்து யூ டியூப் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றுவதற்கு முதலில் Fullscreen BEAM அப்பிளிக்கேஷனில் பதிவு (Register) செய்ய வேண்டும். அதன் பின்னர் கூகுள் கிளாஸின் உதவியுடன் வீடியோக் காட்சி ஒன்றினை பதிவு செய்து Fullscreen BEAM அப்பிளிக்கேஷனுடன் பகிர வேண்டும்.
இவ் அப்பிளிக்கேஷன் மூலம் யூ டியூப் தளத்தில் வீடியோக்களை பகிரும் அதே வேளையில் டுவிட்டர் தளத்தில் அவ்வீடியோவை டுவீட் செய்யும் வசதியும் காணப்படுகின்றது.

Type பண்ணாமல் நினைத்தாலே Password களை அறிந்து கொள்ளலாம்..!

இணையதளத்தில் இருக்கும் நமது அக்கவுண்டுகளை பாதுகாப்பாக வைக்க பாஸ்வேர்ட் பயன்படுத்தப்படுகிறது, மற்றவருக்கு வெறும் ***** ஆக தெரியும் இந்த பாஸ்வேர்ட் பல முக்கிய விவகாரங்களை பாதுகாக்க பயன்படுகிறது.வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் தற்போது பாஸ்வேர்டுக்கும் வழி வந்துவிட்டது.
யு.சி.பெர்க்லி ஸ்கூல் (UC Berkeley school of information) என்ற ஆராய்ச்சி மையம், பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன் மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும் என்று கூறுகிறது.
இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார்.

அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள்electroencephalograms (EEGs), புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.
சமீபகாலமாக, ஆராய்ச்சிகளில் பாதுகாப்பு கருதி விஞ்ஞானிகள் இம்முறையை பயன்படுத்துகின்றனர். மற்ற உடற்புள்ளியியல் முறைகள் போலவே, இம்முறையும் சிக்கலான, விலை உயர்வான பயன்பாடுகளைக் கொண்டது.
ஆனால், பாதுகாப்பான, துல்லியமான மற்றும் மீண்டும் கையாளக்கூடிய விதத்திலும் அமைந்திருப்பது இம்முறையின் சிறப்புகள் என்பது இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Traktor DJ iPhone அப்பிளிக்கேஷன் அறிமுகம்

Traktor நிறுவனமானது சிறந்த முறையில் இசைக் கலவை செய்து ரசிக்கும் மென்பொருளான Traktor DJ - இனை iPhone - களுக்காக இந்த வாரம் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
iOS சாதனங்களுக்கான மிகவும் சிறந்த வலுவுடைய மென்பொருளாகக் கருதப்படும் இதனை iPhone 4S மற்றும் 5 ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுவதுடன் iPod touch சாதனத்திலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
iPhone - களுக்கான Traktor DJ மென்பொருளினை 4.99 டொலர்கள் செலுத்தியும், iPad - களுக்கான Traktor DJ மென்பொருளின் விசேட பதிப்பினை 19.99 டொலர்கள் செலுத்தியும் iTunes app store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.

தரவிறக்கச் சுட்டி


தொலைவிலிருந்து கணனிகளைக் கட்டுப்படுத்தும் வசதியை Google Hangouts தருகின்றது

சமூக இணையத்தளங்களின் வரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படும் Google+ தளத்தில் Google Hangouts எனும் நண்பர்களுடனான வீடியோ சட்டிங் வசதி தரப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே.
ஆனால் தற்போது இதே Google Hangouts வசதி மேம்படுத்தப்பட்டு குடும்பத்தவர்கள், நண்பர்களின் கணனிகளை அல்லது வியாபார குழுவினரது கணனிகளை அவர்களின் அனுமதியுடன் கட்டுப்படுத்தக்கூடிய அல்லது கையாளக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Google Hangouts Remote Desktop Control என அழைக்கப்படும் இப்புதிய வசதியானது கூகுளினால் குரோம் உலாவியில் அறிமுகப்படுத்தப்பட்ட Chrome Remote Desktop வசதிக்கு ஒப்பானதாகக் காணப்படுகின்றது.
இப்புதிய வசதி தொடர்பாக கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் Daniel Caiafa என்பவர் தனது கூகுள் பிளஸ் பக்கத்தில் விபரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, May 3, 2013

கூகுள் ட்ரைவ் தரும் புத்தம் புதிய வசதிகள்


முதற்தர இணைய சேவையை வழங்கிருவம் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் ட்ரைவ் எனும் ஒன்லைன் சேமிப்பகத்தில் புதிய வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் இச்சேமிப்பகத்தில் சேமிக்கப்படும் கோப்புக்களில் இதுவரை காலமும் ஒன்லைனில் வைத்தே மாற்றங்களை (Editing) மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனால் தற்போது இணைய இணைப்பு அற்ற வேளையிலும் (Offline) கோப்புக்களில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.

இது தவிர மாற்றங்களிற்கு உட்படுத்தப்பட்ட கோப்புக்கள் தானகேவே சேமிக்கக்கூடிய (Auto Save)வசதியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்ரோயிட் சாதனங்களுக்கா​ன uTorrent மென்பொருளை பெற்றுக்கொ​ள்வதற்கு


மென்பொருட்களை இலவசமாகவும், சீரியல் இலக்கங்களுடனும் வழங்கும் இணையத்தளங்கள் உட்பட ஏனைய கோப்புக்களையும் இலகுவா தேடிப்பெற்றுத்தருவதில் சிறந்து விளங்கும் மென்பொருளான uTorrent ஆனது தற்போத அன்ரோயிட் சாதனங்களுக்காகவும் வெளியிடப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளானது இலகுவாகப் பயன்படுத்தக்கூடியவாறும்,
விரைவான செயற்பாட்டை உடையதுமாகக் காணப்படுவதுடன் அன்ரோயிட் சாதனங்களுக்கு மிகவும் வலுவுடையதாகவும் அமைந்துள்ளது.
அதாவது எந்தவொரு அளவுடைய கோப்புக்களையும், எந்தவொரு வேகத்திலும் தரவிறக்கம் செய்யக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

iOS சாதனங்களுக்காக களமிறங்குகின்றது Steve Jacksons Sorcery கேம்


கணனி விளையாட்டுகளை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons என்ற நிறுவனம், iOS சாதனங்களுக்காக புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.
பிரித்தானியாவில் இயங்கிவரும் கணனி விளையாட்டுக்களை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons எனும் நிறுவனம் அப்பிளின் iOS சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய Steve Jacksons Sorcery எனும் புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.

இக்கேமானது 1983ம் ஆண்டு காலப்பகுதியில் Penguin Books பதிப்பில் வெளியிடப்பட்ட ‘Fighting Fantasy’ எனும் கதைத் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
4.99 அமெரிக்க டொலர்கள் பெறுமதிவாய்ந்த இதனை iTunes App Store தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

குரோம் பிரௌசரை எளிதாக இயக்க எளிய எழுபது குறுக்கு வழிகள்!


 குரோம் பிரௌசர் பக்கங்களை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்:
குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

  • Space Bar – Page down one full screen at a time
  • Page Down — Page down one full screen at a time
  • Down Arrow – Scroll Down
  • Shift + Space Bar – Page up one full screen at a time
  • Page Up — Page up one full screen at a time
  • Up Arrow – Scroll Up
  • Home – Go to the top of the webpage
  • End – Go to the bottom of the webpage
  • Ctrl + P – Print the current page
  • Ctrl + S – Save the current page
  • Ctrl + O – Open a file from your computer in Google Chrome
  • F5 – Reload the current page
  • Esc – Stop page loading
  • Ctrl + F5 – Reload the current page (ignore cached content)
  • Ctrl + D – Bookmark the current webpage
  • Ctrl + Shift + D – Save all open pages as bookmarks in a new folder
  • Alt + Click on link – Download link
  • Ctrl + F – Open the search box
  • F3 – Find the next match for your input in the search box
  • Shift + F3 – Find the previous match for your input in the search box
  • F11 – Open page in full screen mode
  • Ctrl + + – Make the text larger
  • Ctrl + - – Make the text smaller
  • Ctrl + 0 – Return text to normal size
  • Ctrl + Shift + B – Toggle the bookmarks bar
  • Ctrl + H – View the History page
  • Ctrl + J – View the Downloads page
  • Shift + Esc – View the task manager
  • Ctrl + Shift + Delete – Open the Clear Browsing Data Dialog
  • F1 - Open the Help Center in a new tab
  • Ctrl + U – View page source code

குரோம் பிரௌசர் விண்டோவை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்:
குரோம் ப்ரௌசரில் இயக்க மற்றும் மற்ற விண்டோ(window) பக்கங்களை இயக்க குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

  • Ctrl + N – Open a new window
  • Ctrl + Shift + N – Open a new window in incognito mode (Pages viewed in incognito mode won’t show in browser history or search history. They also won’t leave cookies or other traces)
  • Alt + F4 – Close the current window
  • Shift + Click on link – Open the link in a new window

குரோம் பிரௌசர் டேப் (TAB) இயக்க குறுக்கு வழிகள்:
குரோம் ப்ரௌசரில் ஒரு விண்டோவில் உள்ள டேப்(tab) பக்கங்களை எளிதாக இயக்க குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

  • Ctrl + Click on link – Open link in a new tab in the background
  • Ctrl + Shift — Click on link – Open the link in a new tab and switch to the newly opened tab
  • Ctrl + T – Open a new tab
  • Ctrl + Shift + T – Reopen the last tab that was closed
  • Ctrl + 1 through Ctrl + 8 – Switch to the tab at the specified position
  • Ctrl + 9 – Switch to the last tab
  • Ctrl + Tab – Switch to the next tab
  • Ctrl + Shift + Tab or Ctrl + PgUp – Switch to the previous tab
  • Backspace – Go to the previous page in your browsing history for the tab
  • Shift + Backspace – Go to the next page in your browsing history for the tab
  • Ctrl + W – Close the current tab or pop-up
  • Alt + Home – Go to your homepage in the current tab
  • Ctrl + Click the Back Arrow, Forward Arrow, or Go button – Open destination in a new tab in the background
  • Drag a link to a tab – Open the link in the tab
  • Drag a link to a blank area on the tab strip – Open the link in a new tab
  • Drag a tab out of the tab strip – Open the tab in a new window
  • Drag a tab out of the tab strip and into an existing window’s tab strip – Open the tab in the existing window
  • Press ESC while dragging a tab – Return the tab to its original position

குரோம் பிரௌசர் அட்ரெஸ் பாரை(address bar) இயக்க குறுக்கு வழிகள்:
குரோம் ப்ரௌசரில் அட்ரஸ் பாரை(address bar) இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

  • Type a search term, then press Enter – Perform a search using your default search engine
  • Type a search engine URL, then press TAB, type a search term, and press Enter – Perform a search using search engine associated with the URL
  • Ctrl + Enter after typing base web address – Automatically add ‘www.’ and ‘.com’ what you have typed in the address bar and open that web address.
  • F6 – Highlight address bar contents
  • Type a web address then Alt + Enter – Open web address that appears in the address bar in a new tab
  • Ctrl + K – Initiate a Google search with the address bar. After typing the shortcut key, a ‘?’ will appear in the address bar. Type your query then press Enter.
  • Ctrl + Right Arrow – Jump to the next word in the address bar
  • Ctrl + Backspace – Delete the previous word in the address bar
  • Select an entry from the drop down menu in the address bar, then press Shift — Delete – Delete the entry from the browsing history
  • Click an entry in the address bar drop down list with the Middle Mouse Button – Open that URL in a new tab

குரோம் பிரௌசர் மவுஸ் இயக்கங்களில் குறுக்கு வழிகள்:
குரோம் ப்ரௌசரில் மவுஸ் இயக்கங்களில் என்னென்ன குறுக்கு வழிகள் உள்ளன என கீழே தரப்பட்டுள்ளது.

  • Middle click on link – Open the link in a new tab in the background
  • Shift + Middle click on link – Open the link in a new tab and switch to the newly opened tab
  • Middle click on tab – Close the tab
  • Click the Back Button, Forward Arrow, or Go button with Middle Mouse Button - Open destination in a new tab in the background
  • Shift + Scroll Wheel – Scroll horizontally
  • Ctrl + Scroll Wheel – Increase or decrease text size

Avast Internet Security 7 - ஒரு வருட இலவச லைசன்ஸ் கீயுடன் தரவிறக்கம் செய்ய!


Avast Internet Security 7 புதிய வெர்சனில் கணினியின் வைரஸ், ஸ்பாம், ஸ்பைவேர் போன்ற அனைத்தையும் தேடி அழிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவாஸ்ட் தளம் அறிவித்துள்ளது. ரியல் டைம் ஸ்கேன் மிக சிறப்பாக இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


இங்கே ஒரு வருட வேலிடிட்டி கொண்ட லைசன்ஸ் torrent file ஆக இணைக்கப்பட்டுள்ளது. முதலில் லைசன்ஸ் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
http://www.kickasstorrents.com/avast-internet-security-7-licence-t6203135.html

Torrent file டவுன்லோட் செய்ய bit torrent software டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் Avast தளத்தில் Avast Internet Security 7 இல் trial version என்பதை click செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் முடிந்த பின் setup file இன்ஸ்டால் செய்யவும்.

1. Express install கிளிக் செய்யவும்.

2. பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளது போல நீங்கள் ஏற்கனவே டவுன்லோட் செய்த license file இன் location தேர்ந்தெடுத்து next தரவும்.

3. முழுவதும் இன்ஸ்டால் செய்து முடித்த பின் கீழே படத்தில் உள்ளது போல restart கொடுத்து கம்ப்யூட்டரை restart செய்யவும்.
 

4. கம்ப்யூட்டர் restart ஆன பின் desktopஇல் avast internet security iconஐ கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளது போல window ஓபன் ஆகும். அதில் database update கிளிக் செய்து லேட்டஸ்ட் databaseக்கு update செய்யவும்.
முழுமையாக இன்ஸ்டால் முடிந்த பின் கம்ப்யூட்டரை virus scan செய்யவும்.
source: Activate Avast Internet Security 7 with License File or Activation Code