| உலக அளவில் பிரபலமான மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தாம் தயாரித்த மென்பொருளை உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் பல மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது. அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தங்களுடைய தயாரிப்பான கணனி மென்பொருள் பழுதடைந்தால் அதை பயன்படுத்துபவர்கள், அவர்களுக்கு விருப்பமான மென்பொருளை உபயோகப்படுத்தி இணையதள பயன்பாட்டைப் பெறலாம் என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்நிறுவனம் அறிவித்தது போன்று எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதனால் இணையதள உபயோகித்த 15 மில்லியன் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள் எனத் தெரியவந்தது. இத்தவறினை புரிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அதற்காக பொறுப்பேற்றுக்கொண்டது. எனினும், இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியதால் அந்நிறுவனத்திற்கு 561 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டது. |
Sunday, March 17, 2013
கொடுத்த வாக்கை காப்பாற்றத் தவறியதால் பல மில்லியன் யூரோ அபராதமாக செலுத்திய மைக்ரோசாப்ட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment