Monday, April 29, 2013

CCleaner மென்பொருளின் புதிய பதிப்பு வெளியானது

கணனியின் வேகத்தை கட்டுப்படுத்தும் தற்காலிக கோப்புக்கள் உட்பட அநாவசியமான கோப்புக்களை நீக்கி சிறந்த முறையில் கணனியை இயங்குவதற்கு கைகொடுக்கும் மென்பொருளான CCleaner மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner 4.01 வெளியிடப்பட்டுள்ளது.
விண்டோஸ் இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீங்கலாக புதிய சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இப்பதிப்பானது அனேகமான இணைய உலாவிகளுக்கு சிறந்த ஒத்திசைவாக்கத்தினைக் கொண்டுள்ளதுடன் Windows 8 இயங்குதளத்தின் Registry - இனை சிறந்த முறையில் துப்புரவு செய்யக் கூடியதாகவும் காணப்படுகின்றன.
மேலும் File Finder, System மற்றும் Browser Monitoring எனும் இரு புதிய அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment