தாய்வானைத் தளமாகக் கொண்டு இயங்கும் HTC இலத்திரனியல் உற்பத்தி நிறுவுனமானது HTC First எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவுடையதும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினை கொண்டுள்ளது. இவற்றுடன் Dual Core Qualcomm Snapdragon 400 processor, 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 1.6 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகிவற்றினையும் கொண்டுள்ளது. மேலும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேஸ்புக் ஹோம் வசதியினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 99 அமெரிக்க டொலர்களாகும். |
No comments:
Post a Comment